ஏய் ராட்சசிப் பெண்ணே..!
நான் மட்டுமா?
நீயென்று நான் அணைத்துத்
துயிலும் தலையணை கூட என்
கண்ணீரை அதிகம் பருகியதால்
கண்ணதாஸனாகிப் போனது!
என்னை விட்டு பிரிந்து செல்லத்
தெரிகிறது தானே?
ஏன் கொஞ்சமாவது
புரிந்து கொள்ள முடிவதில்லை
உன்னை ஏந்தியுள்ள என் இதயம்
படும் பாட்டை?
சிந்திக்காமல் நீயும் நானும்
சந்தித்து முத்தித்துக் கொண்ட
நிலவுப் பொழுதுகளின்
நினைவுப் பொழுதுகளை..
இப்போதேனும் மீட்டிப்பார்
பற்றி எரிகிறதே
நம் பலஸ்தீனம் போல!!!