என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, June 24, 2010

இதயத்தின் முகவரிக்குள்!

உன்
அன்பெனும் ஆலையிலே
நித்தமும் சாறு பிழியப் படும்
கரும்பல்லவா நான்!

அப்படியே காதலுடன் என்னை
ருசி பார்த்து மகிழும்
எறும்பல்லவா நீ!

உனக்காக
போருக்கு செல்வதென்றாலும் கூட
வலித்திருக்காது எனக்கு!

உனை விட்டு
ஊருக்குச் செல்வதில் தான்
என்னுடனேயே எனக்கு பிணக்கு!

எப்படியிருப்பேன்?
என் கண்ணீர் துடைக்க
உன் கைகள் அங்கில்லை!

எனக்கு முத்தத்துடன்
தலை தடவ யார் இருக்கிறார்?
வலி கண்டாலும் பொருட்படுத்த
நீயிருக்கமாட்டாயே?

சாப்பிடாத தருணங்களில்
அன்பு இழையோடும்
உன் கடுமையை
யாரிடம் எதிர்பார்ப்பேன்?

நிமிடந் தோறும் உன்
திருமுகம்
இதயக் கண்ணாடியில்
வந்தாடுமே!
அப்போது
தனிமை என்னை பிடித்து
பந்தாடுமே?

என்னை தின்னும் உயிர் வலியே
நீ தான் என் முகவரியே!!!