என் ப்ரியத்தை மழையாக்கி
உனை அதில் நனையவிட்டேன்!
நீயோ போலிகளை தினம் காட்டி
தீ கொண்டு எரித்துப் போட்டாய்!
பாசாங்கு செய்வேரை
ஆங்காங்கே கண்டிருக்கிறேன்!
பாசத்தை அலட்சியமாய்
பயன்படுத்தியவள் நீ தானே?
உனை விட அழகிகளை
ஊரிலேயே கண்டிருக்கிறேன்!
உண்மையாய் மனசுக்குள்
உலவவிட்டது உனை மட்டுமே!
நகம் கூட உனை தவிர
பிற பெண்ணில் பட்டதில்லை!
உன்னையன்றிய எவளையும்
மனசாலும் தொட்டதில்லை!
என் மனதின் இளமானே
முதற் காதலும் நீ தானே!
ஆதலால் நீ வெறுத்தாலும்
உன் நினைவுகளை மறவேனே!!!