என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, June 25, 2010

விஷம் கக்கும் விட்டில்கள் !

காந்தல் மலரின் வாசம் எண்ணி - உன்
கூந்தலை அளைந்து விளையாடிய
போதெல்லாம்
பின்னாட்களில்
அது தேளாய் கோட்டும் என்று
நினைக்கவில்லையடி!

உதட்டோர உன் சிரிப்பின்
உள்ளரங்கத்தில்
ஊர்ந்து திரிந்ததெல்லாம்
விட்டில் போல் உரு காட்டி
விஷம் கக்கும் நட்டுவக்காலிகள்
என அறிந்திராத அப்பாவி நான்!

நின் கைத் தொடுகையின
வெப்பத்தில் கூட
எனை எரித்துப் போடுகிற
கணற்கட்டைகள் இருப்பதாய்
கற்பனையும் வந்ததில்லையே எனக்கு?

என் கைகளில்
புத்தக ஏடுகளில்
மேசையில் எல்லாம்
பொறிக்கப்பட்ட உன் நாமங்கள்!

எனை கிழித்துக் கூறு போடப் போகும்
சாபமிகு ஆயுதமாய்
மாறுவதைக் கூட அறியாதளவுக்கு
என்ன இயலாமை வேண்டிக் கிடந்ததோ
எனக்கு???