நிலாப்பெண்ணே என்று கூறி
என் உள்ளத்தில்
இனிய கவிஞனாய்
உலா வந்த ஸ்ரீதர் அண்ணாவே!
தரம் எட்டில் கற்ற போது
கலாவானம் பார்த்து சந்தோ~முற்றேன்...
வரம் தந்தாட் போல் ஓர் நாள்
நீயே தொலைபேசினாய்!
கரம் தானும் தொட்டுப் பேசாத
உன் ஒழுக்கம் கண்டு
சிரம் மேற்கொண்டு உன்னை
போற்றுகிறேன் அண்ணா!
வாழ்வில் உனை
கொட்டிய கொடுக்குகளை
வெறும் சொடுக்குகளாய் எண்ணாமல்
வடுக்களாய் பார்த்து
துக்கித்தது ஏனோ?
உன்
சறுக்களைக் கண்டு
சிரிக்கவும் ஒரு கூட்டம்
இருந்தனையோ?
அதையெல்லாம் உன் உறவுகள் கூறி
அறிந்தேன் ஐயோ?
பல்கலைத் தென்றலே!
புயலாய் நீ சோகம் தந்தது போதும்...
எழுந்து வா அண்ணா
இலக்கிய உலகுக்கு
கட்டாயம் நீ வேண்டும்!!!