ஐயோ!
நான் படும் வேதனைகளை
அந்த சூரியன பட்டிருந்தால்
பட்டப் பகலிலே
இருளுக்குள் மறைந்திருக்கும்!
உன் குணம் தெரிந்திருந்தால்
காற்றும் உன்னருகே வர
அஞ்சியிருக்கும்!
கவலைகளுக்கு
என் நிலை தெரிந்தால்...
பாவமென விலகியிருக்கும்!
பிரச்சினைகளுக்கு
என் மனம் புரிந்திருந்தால்
ஓசைப் படாமல் ஒதுங்கியிருக்கும்!
நான் வதை படுவது கண்டு
நம்பிக்கைக்கே தன் மீது
நம்பிக்pகயற்றுப் போயிருக்கும்!
எதிர்காலம் பற்றின
என பயமறிந்தால்....
பயமும் உடனே ஒளிந்திருக்கும்!
கண்களில் ஊறும் கண்ணீர் கூட
வருத்தத்துடன்
வற்றியிருக்கும்!
மனசிற்கு தெரிந்திருந்தால்
அது மங்கிப் போய்
மரத்திருக்கும்!
உள்ளம் கொஞ்சம்
அறிந்திருந்தால்.......
எழும்பாமலேயே
உறங்கியிருக்கும்!
இதயமாவது புரிந்திருந்தால்
துடிப்பையாவது
நிறுத்திக் கொண்டிருக்கும்!!!
Posted by தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா