தண்ணீரை நீ கேட்டால்
வடிகட்டி தந்திருப்பேன்..
கண்ணீரை கேட்ட போது
எப்படி நான் துடித்துப் போனேன்?
உன் அன்பைத் தேடினேன்..
நீ எங்கேயோ ஓடினாய்!
உனை நான் நாடினேன்..
கல்யாண கீதம் பாடினாய்!
இதயத்தின் ரணங்களுக்கு
நம்பியிருந்தேன்
உனை மருந்தாய்!
கொஞ்சமாவது புரியாமல்
எனை எப்படி மறந்தாய்?
அன்பென்று நடித்தவர்கள்
பாதியிலே மாறினார்கள்!
வாள்முனை வார்த்தைகளால்
இதயத்தை கீறினார்கள்!
தாலி நீ ஏற்று விட்டாய்
தாயாகவும் மாறி விட்டாய்!
தாடியுடன் அலையும் நான் - இனி
தாரம் தேடப் போவதில்லை!!!