நீ...
நான்...
நம் காதல் மீது
நாம் கொண்ட தீவிரம்!
எல்லாமே
இருட்டடிப்பு செய்யப்படப்போவதாய்
நீ சொன்ன போது
அமிலத்தை
நெஞ்சில் கொட்டியதாய்
உணர முடிந்தது என்னால்!
கண் பார்த்து
கை கோர்த்து
கவிக் குழந்தைகளை தாலாட்டினோமே..
எல்லாம் மறந்து போயாச்சா?
இல்லை அத்தனையும் பொய் ஆச்சா?
உள்மனசில் நீ
உறைந்து கிடந்த போதெல்லாம்
இளகிப்பிரிவாய் என்று
சத்தியமாய் நினைக்கவும்
முடிந்ததா என்னால்?
பிரிவுகள் நிரந்தரமில்லை தான்!
எனினும்
உறவுகளில் உதாசீனம் ஏற்படும்
என்பது உண்மை தானே?
~நீ தான் என் எல்லாமே|
என அடிக்கடி நீ சொன்னது
இன்னும் ஞாபகமிருக்கு!
~தேவதையே..!| உனதந்த குரலின்னும்
காதுக்குள் ஈரமாய் கேட்டுக்கிட்டிருக்கு!
உன் இதயத்துடிப்பையும்
ரத்த ஓட்டத்தையும்
ஆராய்ச்சி செய்து பாரேன்!
என்னை மட்டும் தானே
அவை எல்லாம்
சுமந்துக்கிட்டிருக்கு?
அப்படியிருக்க..
உனக்கெப்படி முடிந்தது
எனை உதறிவிட்டு
மணப் பெண்ணாய் மாற???