இதயப்பாகம் பாறை வைத்தாற்
போல கணக்கிறது!
திரும்பும் திசை எங்கும் தீப்பிடித்த
பிணவாடை மணக்கிறது!
ஒரேயொரு முத்தத்தில் மொத்த
கவலையும் கழிந்துவிடும் என்று
தப்புக்கணக்கு போடுகிறாயா?
அல்லது
முற்று முழுசாய் அன்பை
வெளிப்படுத்த முடியவில்லையே என்று
இதயம் வாடுகிறாயா?
உறவுகள் நெருக்கமாய் இருப்பதெல்லாம்
பிரிவுகளிருக்கும் வரை தானா?
இடைவெளி குறைந்து விட்டால்
அன்பிற்குள் இடைஞ்சல் வருமா?
விதி என்று வீராப்பு பேசினாலும்
சதி தானோ என்று
நினைக்கும் குழந்தை மனசுக்காரி நான்!!!