என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, June 24, 2010

விதவைக் காதலி!

காதலனே..!
என் இதயப் புத்தகத்தில்
உன் நினைவுகள்
பொன்னாய் பதிந்துள்ளன!

அவை ஒவ்வொன்றிலும்
நம் காதல் உள்ளங்கள்
அப்படியே பதிந்துள்ளன!

பெண்களின் வாசத்தைக் கூட
அண்டாத நீ..
என் கண்களின் சேஷ்டையில்
கட்டுண்டது மெய் தானே?

கண் கலங்குகையில் எல்லாம்
ஆறுதல் சொல்லி அணைத்தாயே..
அத் தருணங்களில் எல்லாம்
நீயும் எனக்கு தாயே!

உன் உள்ளத்தில் நானிருப்பதை
அறிந்த பின்னால்..
இந்த உலகையே வென்ற
மகிழ்ச்சி எனக்குள்!

நான் கொண்டேன் சோகம் - இது
யார் தந்த சாபம்?

சூட நினைத்தேனே
உன்னுடன் பூமாலை!
உயிர் கொன்றுப் போனதே
காலனாய் வந்து ~காமாலை|!

உன்னால் நான்
பெறவில்லையே தாலி!
இன்று நானும்
உன் ஞாபகங்களை
தின்று வாழும்
விதவைக் காதலி!!!