நான்..
உன் இளமைப் பூக்களில்
சுகமாய் தேனருந்தப் போகும் வண்டு!
அதற்காக என்னிடமிருந்து
தாலி பெறப் போவது என்று?
கரு விழி அசைவில்
கனிந்தது என் மனசு!
ஒரு துளி நொடியில்
தவித்தது என் வயசு!
கார்மேகம் உன் குழலோ
கவலைகள் போக்குதடி!
கன்னத்தின் குழியழகில்
பாலை செழிப்பாகுதடி!
முன்னழகும் பின்னழகும்
இதயத் துடிப்பைக் கூட்டுதடி!
சம்பிரதாய சடங்கெல்லாம்
சங்கடத்தை மூட்டுதடி!
காதல் செடியை தொடராக
நெஞ்சில் மலர வைக்கிறாய்!
உனை பற்றியே துயிலிலும்
சுகமாய் உளர வைக்கிறாய்!
நித்தியமான உன் நினைவுகளுடன்
உறங்க வைக்கிறாய்!
உயிர் தின்னும் பார்வைகளால்
கிறங்க வைக்கிறாய்!
கூடு கட்டி குடியேற ஆசை
உன் ஒற்றை ஜடையில்!
சரிதானா சொல்லி விடு
சம்மதத்தை விடையில்!
உன் முத்தங்களால் தினமும்
மதிமயங்கிப் போகின்றேன்...
இன்னும் மேலே கேட்பதற்கு
தயங்கி நான் சாகின்றேன்!
கோபம் வேண்டாம்
கண்மணியே
காதலன் நான் கேட்கின்றேன்!
திருவாய் நீ மலர்ந்து சொல்
எதுவென்றாலும் ஏற்கின்றேன்!!!