கலங்காதே காரிகையே!
காதலுடன் உனை காப்பாற்ற
காளை ஒருவன்
வராமலா இருக்கப் போகிறான்?
யாருக்கு யார் என்று
வல்லவன் என்றோ
எழுதி விட்டானே அன்று?
கவலைப்படாதே
தூய காதலின் நிமித்தம்
நீ தூக்கி எறிந்தவை பற்றி!
கண்ணகியே..!
உன் உள்ளம் கவர
வருவான் ஒரு அற்புதமானவன்!
உன்னிடம்
காதல் பாடம் பயில
வரப் போகும் அவன்
உன் ஆசை மாணவன்!
உத்தமி நீ
;~உண்மையாய்| இருப்பதால்
உலகமே வியக்குமளவு
உனை காத்திட வருவான்
ஒருவன்!
ஆம்..
மிகமிக சீக்கிரம் வந்து
உன்னை தனதாக்கிக் கொள்வான்
உன் தலைவன்!!!