என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, June 25, 2010

மழையில் நனையும் மனசு!

மழைநீரின் ஈரமான அரவணைப்பில்
சோகம் தீர்த்துக் கொள்கிற
வரட்டுப் பாசியினங்களைக் காண்கிறேன்!

நான்
போலிச் சிரிப்புகளை கையாள்வதெல்லாம்
உள்ளத்தில் புதையுண்டு போன
வலிச் சுவடுகளை
முடியுமட்டும் மறைக்கத்தான்!

கொடிக் கம்பங்களில் எல்லாம்
கேட்பாரற்று தழைகீழாக தொங்கும்
ஆடைகள் போன்றே..
எதிர்மறை எனும் சிந்தனைக் காற்றில்
என் இதயமும் பல திசைகளுக்கு
முகம் திருப்பியவாறு!

வெளுத்தும் வெளுக்காமலிருக்கும்
வானத்திலிருந்து
ஒரே இடைவெளியில்..
வெயிலும் தூறலும் புறப்படுவது போன்று
சோகங்களையும் சுகங்களையும்
மறைக்கத் தெரியாத மனசெனக்கு!!!