எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றத்தில் நிறைவுறும் போது
எதிலும் நாட்டமில்லாமல்
வேலை நிறுத்தம் செய்கிறது இதயம்!
அன்பு வார்த்தைகளுக்கும்
ஆசை முத்தங்களுக்கும்
உற்சாகம் கொண்டு தானே
ஓடி வந்தேன்..
உன்னை தேடி வந்தேன்!
நாடுகளுக்கிடையிலான
சில பேச்சு வார்த்தை
ஒப்பந்தங்கள் போன்றே
என் கனவுகளும்
தவிடு பொடியாகி விட்டன!
பிறரை சந்தோசப்படுத்த
நீ நினைக்கலாம்..
ஆனால் உன் மீது சந்தேகம்
துளிர்க்கிறதே?
சுடுகாடொன்றில்
வெந்து தகிக்கும்
பிரேதங்கள் போன்றே
சில நேரம்..
கருகித் தான் போகிறது
என் மனசாட்சியும்!!!