என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, June 24, 2010

நான் வசிக்கும் உன் இதயம்!

உன் நேசத்தால் எனக்கு
ஆறுதல் வேண்டும்!
அதனால் இதயத்துக்குள்
சந்தோஷ மாறுதல் வேண்டும்!

ஒரு தருணமேனும் உணவெனக்கு
ஊட்ட வேண்டும்!
அன்புடன் பல செல்லப் பெயர்
சூட்ட வேண்டும்!

கனிவுடன் பாசமதை
தர வேண்டும்!
அஃது ஆழ் மனசிலிருந்து
வஞ்சகமின்றி வர வேண்டும்!

காதல் எனும் தேசத்தில்
தனியே ஆள வேண்டும்!
மாறாமல் இது என்றென்றும்
நீள வேண்டும்!

மடி சாய்ந்து கொஞ்ச நேரம்
அழ வேண்டும்!
உன் பாதம் தொட்டு
சில கணம் நான் தொழ வேண்டும்!

உனை அணைத்துக் கொண்டிருக்க
அந்தி மாலை வேண்டும்!
அதற்கு..
உன்னவளாய் எனக்கொரு
வேலை வேண்டும்!!!