என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, June 29, 2010

சொல்லி(ல்) அடங்காத சோகம்!

பாசம் வைத்த எல்லோருமே
பாதியிலே பிரிந்தது போல்
நேசம்கொண்ட நீயும்
நெஞ்சில் முள் தைக்கிறாய்?

உனை பிரியக்கூடாதென்ற ஆதங்கத்தில்
ஊனுறக்கம் மறந்து அழுததெல்லாம்
பேய் போல் எனைக்காட்டி
பேசவிடாமல் செய்கிறதோ?

கண்ணீரே என் உறவாகி
கவலைகள் மட்டும் எனக்கு வரவாகி
இதயத்தைக் கொல்வது போல்
இம்சை ஏதும் இருக்கிறதா?

காதலியின் கால்களைக்கூட
காதலுடன் முத்தமிட்டு
அணைக்க நினைத்தாலும்
அனைத்துக்கும் கடும் சத்தம்தான்!

பலரின் மத்தியிலும் சகியே
நீயென்னை பரிகசித்த போது
பாவியென் மனம் என்ன
பாடுபட்டிருக்குமென்;றும்
கொஞ்சமாவது பார்க்கலியே???