காதலோடு நீ என்னை
பார்க்கிறபோதும் - அதனால்
என் கவலைகளை தீர்க்கிறபோதும்
வாழ்வின் வசந்தம் புரிந்ததம்மா!
உனைக்காணும் முன்
கோழையாய் இருந்த எனக்கு
காலை மாலையெல்லாம்
காதலிக்க கற்றுத்தந்தாயே!
வாலிபக் காற்றே..!
உன்னால் புரிந்துகொள்ள முடியுமா
நீயில்லாமல் என் ஜீவன் இல்லையே?
நீ முகம் சுளித்தால்கூட
கண்ணீருக்கு
நான் தத்துப்பிள்ளையே!
காலைகளில் காதுமடலருகே
இன்பமாய்த் தவழும்
உன் சத்தமும்..
அணைத்த படியே
அன்பாய் நீ தரும்
முத்தமும் தென்றலாய்மாறி
எனைத் தீண்டிச்செல்லும்!
உன் ஸ்பரிசத்தால் நான் இன்னும்
என்னென்ன ஆவேனோ?
உன் அன்பால் சுருண்டு
உனக்குள்ளே வாழ்வேனோ?
என் நந்தவனத்து புஷ்;பமே!
நீயின்றிய என் வாழ்வில்
இதயத்துடிப்பு சொற்பமே!
வா..
வந்தென்னை உடனே
ஆக்கிரமித்துக்கொள்
உனக்குள் என்னை சீக்கிரம்
ஒளித்துக்கொள்!!!