என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, June 30, 2010

பிறவி செய்த பிழை !

மனசில் பதிந்த எனை
மறந்து விட்டுப் போ என்கிறேன்..
நீயோ...
இதயமே நானாகி விட்டதாய்
இன்று வரை உளறுகிறாய்!

தாங்க முடியாத
வார்த்தைகளாலும்..
மன்னிக்க முடியாத
குற்றங்களாலும்..
துளைத்தெடுக்கிறேன் நான்!

நீயோ..
உன் உலகமே நானென்று
உறுதியாகவே உளறுகிறாய்!

உனை மட்டும் எண்ணியே
வாழ்நாளை கழித்திடுவேன்..
எனை மறந்து நீ..
உன் வாழ்வை வசந்தமாக்கப் பார்!

நடப்பதை யோசி
கிடைப்பதை ஆசி
சீனியற்ற தேனீரை சகித்துக் கொண்டே
குடிப்பது போல்.....
நீயற்ற பொழுதுகளையும்
நினைவுகளால்
சிறை படுத்திக் கொள்வேன்!
பிநவி செய்த பிழை தானே
பெண்ணாக பிறந்து விட்டேன்....

ஏற்கத் தான் உன்னால் முடியாது
உன் எதிர்காலத்தையாவது
சிறப்பாக்கிக் கொள்!!!