என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, June 25, 2010

ப்ரியவாணி பிரிய வா நீ !

என் கண்களுக்கு
ஓய்வென்பதே கிடையாதா?
சதாவும் கண்ணீர் பிரவாகம்
ஊற்றெடுத்தபடியே இருக்கிறதே!

தயவு செய்து மரியாதை போர்வையில்
காதலிகளாடும் வேஷம்..
அந்த மரண அவஸ்தை..
எனக்கும் வேண்டாம்!

கல்யாண பத்திரிகை எனும் பேரில்
கத்தியை சொருகாதே
நீ திருப்பித்தந்த இதயத்துக்குள்!

வேறொருவனின் ஒருத்தியாக
மாறிவிட உன்னால் முடியும் என
தெரிந்துவிட்ட பின்னால்
உன் மீதான என் தேடல்களில்
அர்த்தங்கள் ஏதுமில்லை!

நான் பிரிய நினைக்கவில்லை
நீ துணிந்து விட்டாயே?

ப்ரியமாயிருந்தவளே!
ஊடல்கள் எம்முள் உற்பத்தியாகு முன்
ப்ரியமாய் பிரிய
விடை கொடு முதலில்!!!