என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, June 24, 2010

புன்னகை கத்தி!

பேனாவை
பற்றும் போதெல்லாம்
;அது
உனை பற்றி எழுத மட்டுமே
அடம் பிடித்தழுது
தலை குனியும்!

எனை வதைத்து
அன்பால் கொன்ற நீயா
இன்று
ஏமாற்றி விட்டு தூரச் சென்றது?

பேரதிர்ச்சியடைகிறேன்
உன் மாற்றங்களால்!

நானில்லாத வாழ்வு
நலமில்லை என்றவளே..!
இப்போதென்ன
பிணமாகவா வாழ்கிறாய்?

உனை காதலித்ததற்கு பதிலாக
சுகமாய் கொஞ்சம்
விஷம் குடித்திருக்கலாம்!

பூக்களாய் நீ
புன்னகையை
பரிமாறிய போதெல்லாம்
ஆனந்தப்பட்டு
சிரித்தேனே நானும்?

அந்த பூங்கொத்துக்கிடையில்
வஞ்சகமெனும்
கத்தி இருப்பது பற்றி தெரியாமல்???