இரத்தம் கொட்டிக்கொண்டிருந்த
என் காயங்கள்
சிறிது ஆறினாலும்
ரணப்பட்ட தழும்புகளை
அடிக்கடி தடவிப் பார்க்கிறது
விதியின் கைகள்!
அப்போதெல்லாம்
உலகத்தின் இருட்டுகள்
யாவையும் ஒரே உருண்டையாக்கி
நெஞ்சுக்கூட்டில்
உருட்டி விட்டதாய் உணர்கிறேன்!
பல் இடுக்குகளில் சிக்கிக்கொண்ட
சோற்றுப் பருக்கைகள் போல
உள்ளுக்குள்
இறந்த காலத்தின் நினைவுகள்!
தூசு படிந்த என் மனக் குமுறல்களை
அடிக்கடி கூற
எனக்கு இஷ்டங்கள்
அறவுமில்லை தான்!!!