என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, June 30, 2010

உதிர்ந்த மலர் !

பாருங்கள் கொஞ்சம்....
சாலையோர சாக்கடையில்
என் உடல் வீழ்ந்து கிடக்கிறது!

எச்சில் வழிய
நாக்கை தொங்க விட்டிருக்கும்
இந்த தெரு நாய்க்கு
என் நிலை தெரியாமல்
இல்லை!

என் பிணத்தை
காகங்கள் கூட
அண்டாமல் போவதேனோ?

ஆடை விலகிக் கிடக்கும்
என் அவயவங்களை மட்டும்
ரசிக்கின்றனர்...
மோகம் கொண்ட சிலர்!

மர்;மம் பேசும்
என் மரணத்துக்கு..
வேடிக்கை பார்க்கிற
இப் போலீசுக்கும்
பரிசோதிக்கச் சொல்லும்
டாக்டருக்கும் பங்குண்டு!

ச்சீ..என்ன இது?
வெண்கட்டிகளால்
சித்திரம் கீறிய படி....
நானென்ன
அலங்கார கண்காட்சியா?

நேற்று வரை
என் தலைவலிக்கு
வெறும் பெனடோல் தந்த
டாக்டரும்;;;.....
மஞ்சட் கடவையில்
மயங்கி விழுவதைக் கண்டும்
விசிலடித்து விளையாடிய
போலீசும்........
மர்;மம் பேசும்
என் மரணத்துக்கு..
காரணமானவர்கன் தான்!!!!