உன் காரசாரமான
வார்த்தைகளை
அசை போட்டபடியே
பலமிழந்து விட்டிருக்கும்
இதயத்துக்கு
என்ன மருந்து தந்து
உற்சாகப் படுத்துவாய்?
ஊடலை
யார் மேற்கொண்டாலும்
தேடிப் போக வேண்டியது
எழுதப் படாத
எனக்கான சட்டம்!
சொல் பேச்சை கேட்குமாறு
ஷெல் வீச்சை வீசுவது
அவமானப்படுமென்னால் - நீ
வெகுமானம் காண்பதற்கா?
மறவாதே!
கூந்தல் கட்டி நீ ஆடிய இடமோ
என் இதயமென்ற
;ஊஞ்சல்!
சதி செய்து எனை மறந்தாலும்
பொதி சுமப்பேன் உன் நினைவுகளை
என் நெஞ்சில்!!!