என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, June 30, 2010

குட்டிக்கவிதைகள்!

மச்சம் !

உன்
உதட்டருகே
உலா வந்து
உயிர் வாங்குதே மச்சம்..
சத்தியமாய் நீயின்றி மனசுக்குள்
ஏதுமில்லை மிச்சம்!

நிலவுப்பெண்ணே!

நிலவுப்பெண்ணே
எத்தனை ஆயிரம் நட்சத்திரக் காதலர்கள்
உன் கடைக்கண் பார்வை கேட்டு
தவமுடன் ஏங்க...
நீயோ
யாரை எண்ணி உடல் மெலிவதும்
பின் பூரிப்பதும்???

மாற்றம் !

வஞ்சியே!
உனை இதயம் ஏற்ற போது
பூக்கடையாகத்தான இருந்தது..
உன் பிரிவு தந்த சோகத்தின் பின்
சாக்கடையாகிப்போனது!

துரோகம் !

உன் ப்ரியத்தை
கடித்தில் உள்ளடக்காதே...
அது
சுவைத்துக்கொண்டு இன்பத்தை
தருகிறது வெறும் வார்த்தையை!!!

சமர் !

ஆவலுடன் உன்னில்
நான் மலர் கொய்கிறேன்...
பார்வைகளால் ஏனடி
சமர் செய்கிறாய்?

கண்ணாடி !

உன் கண் நாடி போதுமே
கல்நெஞ்சையும் கரைய வைக்க!
கண்ணாடியூடாக காந்தப்பார்வை எதற்கு?

'கத்ரினா' கயல்விழியே!

'கத்ரினா' கயல்விழியே!
உன் பார்வையால் மோசமாக தாக்கப்பட்ட
இதயத்தை
காதலெனும் வைத்தியசாலையில்
அனுமதித்திருக்கிறேன்..
இதை சுகமாக்க மறுக்கும்
உன் உள்ளம் தான் இன்னும்
விதியில் காலடியில்
சிக்கியவாறே..!

பூட்டு !

உன் ஆன்மாவைக் கொஞ்சம்
எட்டிப்பார்
அதன் வாசலில் முழந்தாழிட்டு காத்திருக்கிறேன்
காதல் வரம் கேட்டு...
அதை புரியாதபடிக்கு
என்ன வேண்டிக்கிடக்கு
அப்படியொரு பூட்டு?

நட்சத்திரங்கள் !

இன்று என் வானில்
ஏன் இத்தனை நட்சத்திரங்கள்?
ஓ...
நீ கண்விழித்துப்படிக்கிறாயா?

இதயம் !

இதயம் என்ன
இன்டர்நெட்டா?
நினைத்தவுடன்
வருவதற்கும்
போவதற்கும்?

'நீ' !

மொத்த தமிழ் எழுத்துக்களில்
பிடித்தது எதுவென்றாய்...
உடனே 'நீ' என்றேன்...
உன்னையே சொல்லி விட்டதாய்
குரூர திருப்தி எனக்குள்!

பாலைவனம் !

காதல் குழைகளாய் பூத்துக்குலுங்க
நட்டினேன் உன் இதயத்தில்
வாழைமரம் ஒன்று...
நான் அறிந்திருக்கவில்லை
அது ஒரு பாலைவனம் என்று!

அசிங்கம் !

பொடுகை அசிங்கம் என
வெறுத்தவன் தான் நானும்...
உன் தலையில் அதை
காணாத வரை!

தீர்த்து விடு !

சிலந்தியே!
பூச்சி நான்
உன் வலையில்
வேண்டும் என்றே சிக்கிக்கொண்டேன்!
அப்படியே இரையாக்கி
அன்பால் என்னை
தின்றுத் தீர்த்து விடு!!!