என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, June 24, 2010

எனக்கு பிடித்த உன் நேசம் !

காதலுக்கு தடையாயிருக்கும்
கடிகாரம் மீது
கடும் கோபம் எனக்கு!

இரவெல்லாம் கதை பேசி
அதிகாலையிலும் தழுவுவாயே..
அந்த சுகத்தில் தேநீர் கூட
தேவையிராது!

பசி மறந்து
அலுவலாய்
;இருக்கும் போதெல்லாம்
ஊட்டி விடும் உன் நேசம்
ரொம்பவும் பிடிக்கும் எனக்கு!

குளித்து முடிந்ததும்
தலை துவட்டும் உன்; முந்தானை..
அது என் உயிரின் கவசம்!

துணிகளும் துவைத்து
எனக்கென சமைத்து..
என் வருகைக்காய் காத்திருப்பாயே..
அந்த எதிர்பார்ப்பில்
கவலையையும் இன்பத்தையும்
அனுபவித்திருக்கிறேன்
ஒன்றாகவே!

என் கண்ணீரையும் துடைத்துப் N;பாடும்
உன் கைகளுக்கு..
முத்தத்தால் வளையல் செய்து போட
ஆசை!

ஆறாத என் இதய ரணங்களையும்
ஒரே புன்னகையில் தடவும் போது..
தழும்புகளின் தடயங்களும்
மறைந்து போகும் தெரியுமா?;

உடலாலும்
மனசாலும்
நான் சந்தோஷிப்பதற்காக
நீ செய்யும் சதா ப்ரார்த்தனையால் தான்
இன்னமும் நான்
உயிர் வாழ்கிறேனோ என்னவோ???