ஏடாகூடமாய் ஏதாவது
சொல்கையில் எல்லாம்
போடா பொறுக்கி என
சிணுங்குவாயே!
வாடாத பூவாய்
எண்ணியிருந்தேன்..
நீயோ
சோடாவாய் மாறி
சீறியதும் ஏன்?
காதலியாய் உனை
எண்ணியே
பேதலித்துப் போனது என்
மரமண்டை!
எத்தனை முறை
அரங்கேறியிருக்கும்
எனக்கும் உயிருக்குமான
மௌன சண்டை?
இறைவன் நடத்திய
விளையாட்டில்..
நீ தான் குடிவந்தாய்
என் மன வீட்டில்!
சித்த பெய்த மழையும்
சங்கமிக்கிறதே
பூமியுடன்!
மொத்த காதலை காட்டியும்
இணைய விருப்பமில்லையா
இந்த பாவியுடன்!
உன்னில் எனக்கிருக்கிறது
மிகையான அக்கறை!
உனை அடைவேன் நிச்சியமாய்
நீ சென்றாலும் உலகின்
அக்கரை!!!