உன் பார்வை பட்டவுடன்
குருதியோட்டம் அதிகமாகிறது!
நீ வந்து போவதால்
பூந்தோட்டம் சுவனமாகிறது!
உனை காண்கையில் எல்லாம்
அன்புப் பறவை
உயிர்த்து எழுகிறது!
கவலை துன்பம் அதனாலே
உதிர்ந்து விழுகிறது!
கண் ஜாடையால் உன் காதல்
குறிப்பு தருகிறது!
அப்போது
என் இதழில் மெதுவாய்
சிரிப்பு வருகிறது!
அனுதினமும்
என் இதயம்
உன்னை காப்பாற்றுகிறது!
நீ குளிக்க
என் விழிகள் நீரூற்றுகிறது!
உன் மௌனத்தால்
காதல் வினாடிகள் வீணாகிறது!
ஆனாலும்
உன் நெருக்கம் எனக்கு தேனாகிறது!
என் கனவுகள் கூட
உன் மீது மட்டுமே படிகிறது!
அந்த நினைவுகளுடனேயே
என் வானமும் விடிகிறது!!!