ஊசி முனையாய் கசிகிறது
உயிர்துளி!
ஜீவிதம் கசத்ததால்
தன்னை தானே
தண்டித்துக் கொள்கின்றன
என் ஒவ்வொரு அணுவும்!
தப்பெதுவும் உனக்கானதல்ல
ஏனெனில்..
உனை காதலித்த முதல் தப்பு
என்னுடையதன்றோ?
என்னிடமிருந்து
விவாகரத்தாகின்றன
எனக்குள்
பொங்கிப் பிரவாகித்த
உன் ஞாபகங்கள்!
ஆசையாய்
உனை அணைத்துத் தழுவிய
நினைவுத் தழும்புகள்
இன்று
அக்கினியாய் மாறி வதைக்கின்றன!
காதல் அத்தியாயத்தை
ஆரம்பித்து வைத்த
வரலாற்று குற்றவாளி
நான்!
அதனால் தானா
இதய ஏட்டை கிழித்துப் போட
நினைக்கிறாய் நீ?
வார்த்தை இடிகளின்
வலி தெரியாதிருக்க
நானொன்றும்
இரும்பு இதயக் காரியல்ல!
உன் நெஞ்சச் சிறையில்
ஆயுட் கைதியாய்
வசிக்க முயன்ற எனை
காதல் வரலாறு
மன்னித்து விடட்டும்!!!