என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, June 29, 2010

மலையக மாதின் மனக்குமுறல்!

தூபங்களிட்டாற் போல
சாபங்கள் நீங்குறதேயில்ல!
வேர்வை வர ஒழைச்சும்
வேதனமோ பசியாற்றல்ல!
கோர்வையா வெலயேத்தம்
கோமானுக்கு இரக்கமில்ல!

மலையகத்தில் கம்பீரமாக
வேதனை யெனும் மால!
நிரந்தரமா என் அகத்தில்
துயரத்தின் ரேக!

தேயில சுமை முதுகில்
வாழ்க்க சுமை மனசில்;;;!
புருஷன் சம்பளத்தோட
சாராயக் கடையில்!

ஆயிரம் ப்ரார்த்தனை
என் உள்ளத்தில் விரியுது!
நீண்ட நாளாய் அடுப்புக்கு பதில்
வயிறும் எரியுது!

நாட்டின் நன்மை கருதி
தேகம் அழியுது
தேயில காட்டில்!
முன்னேற்றம் துளியுமின்றி
காலம் கழியிது
அதன் பாட்டில்!

மலநாடு சாதனை புரியுது
சரித்திரத்தில் மட்டும்!
துரத்தும் தரித்திரம்
எப்போ ஒழியுமோ
எங்கள விட்டும்???