அழுத்தமாக ஒரு வார்த்தை உன்
அதரம் விட்டு வெளி வந்தாலும்
இரும்புருக்கி சொருகியது போல
இதயத்தில் வலியெடுக்கிறது!
சூழ்நிலை கைதியாகி
சுகம் நான் கண்ட பின்பு
அகம் முழுவதும் வியாபித்து விட்டது
அழிக்க முடியாத சோகம்!
எனை நானே தேற்றிக் கொள்ள வேண்டிய
வரட்டுப்பிடியில் சிக்கி
சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பது பற்றி
எனக்கும் விளங்குகிறது தான்!
தேசம் விட்டு
பல மைல் தாண்டி உன்
நேசம் மட்டும் தேடியே ஓடி வந்தேன்!
நீயோ எனை வெளி
வேஷக்காரி என்றெண்ணி அன்பில்
மோசம் செய்து துவம்சிக்காதே!!!