என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, June 29, 2010

மௌனமாய் ஓர் விண்ணப்பம் !

ஆழ் மனசில்
வளர்த்திருக்கிறேன்
சொல்ல முடியாத ஆசைகளை!
அதனால் நீ
புரிந்து கொள்
என் மௌன பாஷைகளை!

கடந்த நாட்கள்
கவலை கொண்டேன்
ஏன் தான் பிறந்தேன் என்று!
பிறவிப் பயனை
உணர்ந்து கொண்டேன்
உனை சந்தித்த அன்று!

தொலைவானம் பார்த்து நான்
வாழ வெறுப்பை சுமந்து
நின்றேன்!
தொலைபேசியில் நீ கிடைத்தாய்
வாழ விருப்பு
என்றுணர்ந்தேன்!

எல்லோரிலும் நான் கண்டது
எனை எரிக்கும் தீ!
வாழ விருப்பும் அன்பும் சேர்த்து
எனக்களித்தது நீ!

உன் வதனத்தில் மலர்ச்சியாம்
பலர் சொல்ல கேட்டேன் நான்!
நாளெல்லாம் இது தொடர
படைத்தவனை கேட்பேன் நான்!

பார்வையால் என்றென்றும்
இதயத்தைத் துளைக்கிறாய்!
எப்போது எனை உனக்குள்
ஒளித்துக் கொள்ள இருக்கிறாய்?

எனை நோக்கி நீ இருப்பது
புகைபடத்தில் மட்டுமா?
என்றென்றும் நீ வேண்டும்
என் ஆவல் கிட்டுமா?

எல்லாமே உளறி விட்டேன்
வெட்கத்தை விட்டு!
என்னவனே போகாதே
உன்னுடைய என்னை விட்டு!!!