என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, June 29, 2010

கடலளவு நேசம்!

உன் திருமணத்தின் பின்
நான் வெறுமனே ஆகிடுவேனோ?
எனைப் பிரிந்து ஓடிவிட்டால்
இதயம் எரிந்து வாடிடுவேனோ?

வற்றாத நதியாய் உன்மீது என்
நெஞ்சில் காதல் வெள்ளம்!
எனைவிட்டு நீ சென்றால்
மனமெப்படி தாங்கிக் கொள்ளும்?

காட்டிடாதே அன்பிலே
எனக்கு தட்டுப்பாடு!
கவலை தந்த எனை மன்னித்து
அன்பால் கட்டுப்போடு!

இதயத்தில் படர்ந்துவிட்டாய்
வேராக!
எனைத்தனியாக பரிதவிக்கவிடாதே
வேறாக!

அழுதிடுவேன்..
உன் நினைவுகளில்
விழுந்திடுவேன்!
நின் நன்மை வேண்டி இறைவனை
நிதமும் நான் தொழுதிடுவேன்!

துடிதுடிப்பேன்..
நான் கண்ணீரும் வடிப்பேன்!
நெஞ்சிலிருக்கும் உன் பெயர்
தினம் தினம் தவறாது படிப்பேன்!

உடலளவில் நீ
தூரதேசம் சென்றாலும்..
கடலளவு நான் கொண்ட
நேசம் வற்றாது ஒரு நாளும்!!!