யுகங்களாய் வருத்தும்
ஒவ்வொரு நிமிடமும்
உன் அன்பினைத் தவிர
ஞாபகங்கள் ஏதுமில்லை!
வேலைத்தளத்தில் போராட்டங்கள்
ஆயிரம் தான்..
ஆயினும் என் இதயத்தின்
அடித்தளத்தில் நீயமர்ந்து
எனை உற்சாகப்படுத்துகிறாய்!
உனைக் காண
கூடு உடைப்பட்ட கிளியாய்
அந்திமாலை ஓடி வருகிறேன்!
காலைகளில் மட்டும்
சிறகுடைந்த குருவியாய் வாடி விடுகிறேன்!
எனை ஏற்றவளே..
எனக்கு ஏற்றவளே!
பருவத் தவிப்பில்
பரிதவித்த எனக்கு
பக்குவமாய் விளக்கினாய்
பலி சொல்லும்
உலகம் பற்றி!
தடுமாற்றம் கண்ட என் இதயத்துக்கு
தடம் மாறாத படி
அறிவுரை தந்தாய்!
என் வாழ்க்கைப் பயணத்தை
விபத்தில் வீழ்த்தாமல்
வழி நடத்தக் கூடிய சாரதி
நீ தானம்மா!
என்னில் காட்டும் உன் ப்ரியத்திற்கு
ஆயுள் முழுக்க நான் உனக்கு மட்டுமே
சொந்தமடி சகியே!!!