நிலவெரியும் ஓர் இரவில்
விதியென்ற பாம்பு
முழுமையாய் விழுங்கிற்று
என் வாழ்நாள் இன்பத்தை!
கூரான கத்திரி முனைகளுக்குள்
அகப்பட்டது போல்
என் சந்தோஷ காகிதமும்
சதாவும்
நறுக்கி அரியப்பட்ட படியே!
அன்புக்கும்
பொய்மைக்குமிடையில்
அகப்பட்டு விட்ட
பாவம் செய்த ஜீவன் நான்!
பெரும் கோபம் வருகிறது
எனை பந்தாடிப் பார்க்கிற
அந்த ஆண்டவனிடம்!
நேசம் என்ற முகமூடி அணிந்து
நெருப்பு வார்த்தை கக்கும்
எத்தனை கயவர்களை
கண்டவள் நான்?
ஒரு நாளும்
அன்பு கிடையாது என்றும்
கவலைகள் உடையாது என்றும்
தலை கீழாய் எழுதப்பட்டிருக்குமோ
என் தலையெழுத்து?
என் மனசாட்சி
உயிர் விட்டதன் காரணம்
என் மேல் நானே கொள்கிற
கழிவிரக்கம் தாளாமல் தான்!!!