என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, November 21, 2012

ராசிக் பரீட் புகழ் மாலை எங்கும்


மனமெங்கும் சந்தோஷம் பொங்கும்
நம் ராசிக் பரீட் புகழ் மாலை எங்கும்
இதயத்தில் இன்பங்கள் தங்கும்
இந்த இன்பங்கள் வேண்டும் என்றென்றும்

வானுயர்ந்த மலைகளின் நடுவே
வாகனப் பாதையின் அருகே
பண்டாரவளை நகரத்தில் அமைந்த
பாடசாலை நம் ராசிக் பரீடே

அழகான சூழலிலே அமைந்த
அதிசயிக்கும் எழிலழகில் நனைந்த
இஸ்லாமிய பாடசாலை இதுவே
அதன் நாமம் ராசிக் பரீடே

மாணவரும், மாணவியரும் சிறந்து
அதிகாலை வேளையிலே பறந்து
அணிவகுத்து வருவதே ஒரு அழகு
அழகாகத் தோன்றும் இந்த உலகு

நிலம் நன்றாய் இருந்தால்தான் நாளும்
விதை நன்றாய் வளர்ந்திடுமே மேலும்
விதை நன்றாய் வளர்வதற்கோர் நாமம்
நன்நிலமாம் ராசிக் பரீட் ஆகும்

அகரவரிசை கற்றுத் தந்த அவர்கள்
ஆசிரியர்களல்லர் அதற்கும் மேலோர்
ஒழுக்கத்தோடு பண்பையும் நமக்கு
ஓங்கியே சொல்லித் தந்த மேலோர்

பார் போற்ற நாம் வாழ என்று
பாதைகளைக் காட்டியே இங்கு
பல்துறையில் நாம் சிறக்க வென்று
படிக்கல்லாய் இருந்தீரே அன்று

உயர்தரத்தில் பாடங்களை நன்றாய்
உண்மையாய் கற்றுத் தந்தீர் பண்பாய்
உயர்வான ஆசிரியர்களே கேளும்
உமக்கென் நன்றிகள் மென்மேலும்

மாணவரின் நலன்களிலே என்றும்
மாறாத அக்கறையால் இன்றும்
அன்பாக வழிநடத்திச் செல்லும்
அதிபருக்கும் நன்றிகள் என்றென்றும்

நவோதய நாமம் பெற்ற பெருமை
நம் பாடசாலை ராசிக் பரீடே
நாமெல்லாம் அதில் கற்றது
நாம் செய்த பெரும் தவமே!!!

இருளுக்கு தீ வைப்போம்


வெட்ட வெளியினிலும்
அட்டைக் கடியினிலும்
அடிமை வாழ்வு..

மாடாய் உழைத்தும்
ஓடாய்த் தேய்ந்தும்
ஓயவில்லை ஏற்றத்தாழ்வு!

பட்டப்படிப்பு படித்திடனும்
பட்டதாரி ஆகிடனும்
பட்டணம் சென்று ஒரு
வைத்தியனாய் மாறிடனும் என்ற
கனவெல்லாம் நனவாகாமலேயே!

வாயைக் கட்டி
வயிற்றைக் கட்டி
பட்ட பாடெல்லாம்
காகித ஓடமாக இப்போதும்!

உழைத்தும் பலனின்றி
பிழைக்க வழியின்றி
இருட்டோடு வாழுகிறோம்
வெளிச்சத்தைத் தேடுகிறோம்!

கொழுந்து கிள்ளிய நகங்கள்
வெடித்து இரத்தம் கசியும்
வெயிலோடும் களைப்போடும்
வந்திடும் பசியும்!

எம்மவரின் உதிரமும்
நிலத்தில் விழும் வியர்வையும்
ஒன்றோடு கலந்தேதான்
தேயிலையும் உருவாகும்!

உருவான தேயிலையால்
உருவாக்கிய தேநீரில்
எம்மவரின் உழைப்பெல்லாம்
சிவப்பாகி சாயம் வரும்!

கொடிய மண்சரிவும்
கொடூர மழையும்
லயத்துக் காம்பராக்களை
லாவகமாய் உடைக்கும்!

ஒரு நாள் சம்பளமும்
ஒழுங்காய்த் தரப்படாமல்
ஒழுங்கற்ற நிர்வாகம்
எம் வாயை அடைக்கும்!

ஷஎழில் கொஞ்சும் மலையகம்|
ஏட்டில் தான் காணுகிறோம்
மலை நாட்டு மக்களுக்கு
மதிப்பில்லை என நாணுகிறோம்!

இனிமேலும் பொறுக்காமல்
நாணயத்தை இழக்காமல்
இருளுக்குத் தீ வைப்போம்
இதிகாசம் மாற்றிடுவோம்!!!