
அடிக்கடி நான்
மரணித்துப்போகிறேன்...
இந்த உலகம் விசாலமானதாம்...
ஆனால்
விசேஷமாக நான்
எதையும் காண்பதில்லை!
ஒரு அமானுஷ்ய சக்தி
எனக்குள் ஊடுறுவி விட்டதாகத்தான்
உணர்கிறேன்!
ஊரடங்கு நேர வீதி போல
வெறிச்சோடிக்கிடக்கிறது
இதயம்...
கடலைப்பிளந்த
நெருப்புக் குண்டமாக
மனசுக்குள்ளே
ஒருவித உருட்டுதல் சதாவும்!
என் ஆகாயத்துக்கு மட்டும்
அஸ்தமனம் மீது
அப்படி என்ன தான் காதலோ?
பகலில் சூரிய் - தன்
அகோரப்பற்களைக்காட்டி
என்னைப் பயமுறுத்த
நான் நேசித்வைகளெல்லாம்
நகம் வளர்த்த கையை - என்
குரல்வளையை நோக்கி
நீட்டியதாகவே!
மண்ணை தகர்த்துக்கொண்டு
வெளிவந்த எலும்புக்கூடுகள்
இரத்தம் நிரம்பிய குவகைளுடன்
உல்லாசமாக!
எல்லோருடைய குப்பைகளும்
என் இதயத்தொட்டியில்
இடப்பட்டதாய்
மாறுகிறது!
ஐயோ
ராட்சசக் கழுகொன்று
இதயத்தைக் கொத்திக்குதறி
ரணமாக்கிய வண்ணம்!
விஷ ஜந்துகள் எல்லாம்
என் மேனியை முத்தமிட்டு
செந்நீர் பருகி
காமம்
தீர்த்துச்செல்கின்றன!
ஓர் ஒளிக்கீற்றைக் கூட
கண்டிராத
கானகமொன்றின் நடுவில்
சிக்கிய
கோழிக்குஞ:சாய்
இப்போது நான்!!!