
காலை நேர நிலவாய்
என் வாழ்நாள் கழிகிறது...
ஐயறிவு ஜீவக் கொண்ட
உரிமை கூட இன்றி நான்!
என் தலைதனில்
அரைக்கப்படும்
மிளகாயின் காரங்கள்
மகா கொடுமை!
வேலைவெட்டியின்றி
வெட்டிவேலை செய்வதில ;தான்
காலனுக்கும்
சந்தோஷமோ என்னவோ?
என் இதயப்பாத்திரத்துக்குள்
வேக வைக்கப்படுகின்ற
உணர்ச்சிகள் எனும் உணவுகள்
உப்புச்சப்பற்றதாகவே
கொட்டப்படுகின்றன நித்தமும்!
வழி தேட முடியா
பறவையின் நிலையில் நான்..
வலியில் சிறகுகள்
(து) அடித்துக்கொள்கின்றன...
என் நெஞ்சாங்கூட்டுக்குள்
தடவித்தடவி
எதையோ தேடுகிறேன்...
என் கைகளை அணைப்பதென்னவோ
வெறுமை தான்!!!