என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Saturday, September 4, 2010

ஓர் இதயத்தின் குமுறல்!



அட்டையாய் என்
இதயத்தில் அமர்ந்து
ஏன் என் இரத்தம் உறிஞ்சுகிறாய்?
உன் வார்த்தைகளின் சுனாமியினால்
சேதப்பட்ட உள்ளத்தை
சீராக்கத்தானே
நிலவினைப்போல
உன் நினைவுகளுடன்
தேய்ந்தும்
தூரமாகவே இருக்கிறேன்....

உனக்குத்தெரியாது
என் சோகம் தின்று
சோர்ந்து போன
கைக்குட்டைக்குத்தான் தெரியும்
இந்த இதயத்தின் புலம்பல்...

தூங்கினாய் நீ
கனவு கண்டது நான்..
வெயிலில் போனாய் பொனாய் நீ
வெந்து துடித்தது நான்...
குளிரின் கையிலே நீ
உன்னிடம்
போர்வையானது கூட நான்...

ஆனால்
இப்போது - தினமும்
இன்னொரு அரவணைப்பிலே நீ..
அதனால்
நித்தமும்
சாவின் பிடியிலே நான்!

சா தா ரணம்!



தோரணங்களாய் மாறி
என்னை அலங்கரிப்பதெல்லாம்
நான் பட்ட ரணங்கள தான்!

விரும்பியோ விரும்பாமலோ
காரணங்கள தெரியாமல்
துன்பங்கள யாவும்
ஆபரணங்களாய் மாறி
வதைக்கும்
என் அனுமதி துளியுமின்றி!

சாதாரணமாய் பொய்விடும் என்று
சமாதாகம் அடைந்தாலும்
அவையோ
சதா ரணமாகவே
தொடர்ந்த வண்ணம்!

விம்மலுடன் பொங்கியெழும்
கண்ணீரை மறைத்தே வாழ்ந்து
பழக்கப்பட்டவள் நான்...
சிலரின் அற்ப ஆயுளில்
பூரணமாக செத்துப்போகும் சுகத்துக்காக
வாழ்நாள் முழுவதும்
கண்ணீரை மட்டுமே
ஏந்த வேண்டியதாச்சு நான்!

ஏனிந்த அவலம்

சிறகுடைந்த பறவையின் பாடல்!



காலை நேர நிலவாய்
என் வாழ்நாள் கழிகிறது...
ஐயறிவு ஜீவக் கொண்ட
உரிமை கூட இன்றி நான்!

என் தலைதனில்
அரைக்கப்படும்
மிளகாயின் காரங்கள்
மகா கொடுமை!

வேலைவெட்டியின்றி
வெட்டிவேலை செய்வதில ;தான்
காலனுக்கும்
சந்தோஷமோ என்னவோ?

என் இதயப்பாத்திரத்துக்குள்
வேக வைக்கப்படுகின்ற
உணர்ச்சிகள் எனும் உணவுகள்
உப்புச்சப்பற்றதாகவே
கொட்டப்படுகின்றன நித்தமும்!

வழி தேட முடியா
பறவையின் நிலையில் நான்..
வலியில் சிறகுகள்
(து) அடித்துக்கொள்கின்றன...

என் நெஞ்சாங்கூட்டுக்குள்
தடவித்தடவி
எதையோ தேடுகிறேன்...
என் கைகளை அணைப்பதென்னவோ
வெறுமை தான்!!!

எலும்புக்கூடுகள்



அடிக்கடி நான்
மரணித்துப்போகிறேன்...
இந்த உலகம் விசாலமானதாம்...
ஆனால்
விசேஷமாக நான்
எதையும் காண்பதில்லை!

ஒரு அமானுஷ்ய சக்தி
எனக்குள் ஊடுறுவி விட்டதாகத்தான்
உணர்கிறேன்!

ஊரடங்கு நேர வீதி போல
வெறிச்சோடிக்கிடக்கிறது
இதயம்...
கடலைப்பிளந்த
நெருப்புக் குண்டமாக
மனசுக்குள்ளே
ஒருவித உருட்டுதல் சதாவும்!

என் ஆகாயத்துக்கு மட்டும்
அஸ்தமனம் மீது
அப்படி என்ன தான் காதலோ?

பகலில் சூரிய் - தன்
அகோரப்பற்களைக்காட்டி
என்னைப் பயமுறுத்த
நான் நேசித்வைகளெல்லாம்
நகம் வளர்த்த கையை - என்
குரல்வளையை நோக்கி
நீட்டியதாகவே!

மண்ணை தகர்த்துக்கொண்டு
வெளிவந்த எலும்புக்கூடுகள்
இரத்தம் நிரம்பிய குவகைளுடன்
உல்லாசமாக!

எல்லோருடைய குப்பைகளும்
என் இதயத்தொட்டியில்
இடப்பட்டதாய்
மாறுகிறது!

ஐயோ
ராட்சசக் கழுகொன்று
இதயத்தைக் கொத்திக்குதறி
ரணமாக்கிய வண்ணம்!

விஷ ஜந்துகள் எல்லாம்
என் மேனியை முத்தமிட்டு
செந்நீர் பருகி
காமம்
தீர்த்துச்செல்கின்றன!

ஓர் ஒளிக்கீற்றைக் கூட
கண்டிராத
கானகமொன்றின் நடுவில்
சிக்கிய
கோழிக்குஞ:சாய்
இப்போது நான்!!!

சீதனம் திண்ணும் கழுகுகளும், சிறகொடிந்த பறவைகளும்!

கவிதைகளை கண்ணீரால் கழுவுவது
வனிதையர் பெற்று வந்த வரமா?
களைஞர்கள் காரணங்களை
கதறி எழுதியும்
இளைஞர்கள் இளகாதது
வெறுமனே பணமா?

எங்கு பார்த்தாலும்
பொதுவான அந்த சிக்கல்...
பெற்றோருக்கும்
அதை எண்ணியே
சதாவும் விக்கல்...

சீ தனத்தை
வேண்டியலையும் இவர்கள்
ஒருமாத வேதனத்தை தானும்
காணாதவர்கள்!

பணக்கார நிரோசாவை
'நீ ரோசா' என்று விட்டு
ஏழைக்குமரி தேவயாணியை
'தேவையா' நீ என்கிறார்களே...

வாழத்துடிக்கும் இந்த
அபலைகளின் அபிலாஷைகள்
அந்தக்கழுகுகளுக்கு
புரியப்போவது எப்போது?

பிறவி செய்த பிழை !



அட்டையாய் என்
இதயத்தில் அமர்ந்து
ஏன் என் இரத்தம் உறிஞ்சுகிறாய்?
உன் வார்த்தைகளின் சுனாமியினால்
சேதப்பட்ட உள்ளத்தை
சீராக்கத்தானே
நிலவினைப்போல
உன் நினைவுகளுடன்
தேய்ந்தும்
தூரமாகவே இருக்கிறேன்....

உனக்குத்தெரியாது
என் சோகம் தின்று
சோர்ந்து போன
கைக்குட்டைக்குத்தான் தெரியும்
இந்த இதயத்தின் புலம்பல்...

தூங்கினாய் நீ
கனவு கண்டது நான்..
வெயிலில் போனாய் பொனாய் நீ
வெந்து துடித்தது நான்...
குளிரின் கையிலே நீ
உன்னிடம்
போர்வையானது கூட நான்...

ஆனால்
இப்போது - தினமும்
இன்னொரு அரவணைப்பிலே நீ..
அதனால்
நித்தமும்
சாவின் பிடியிலே நான்!